அரிசியை சரும அழகிற்கு பயன்படுத்தலாமா?

அரிசியை சரும அழகிற்கு பயன்படுத்தலாமா?

நம்மில் பெரும்பாலானோரின் உணவு பொருளாக விளங்குவது அரிசி (சாதம்) தான். இதை சாப்பிட மட்டுமில்லாமல் சருமத்தில் பயன்படுத்தினால் சரும அழகிற்கும் பயன்படுத்தலாம். அரிசியை சரும அழகிற்கு பயன்படுத்தினால் சருமம் நீண்ட காலத்திற்கு பொலிவுடனும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும். அரிசியை சருமத்திற்கு பயன்படுத்தும் வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.

வழிமுறைகள்:-

சுத்தமான அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு நீர் ஊற்றி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அந்த நீரை பயன்படுத்தி முகத்தை கழுவி காய்ந்த பின்னர் மறுபடியும் முகத்தை கழுவுங்கள். இப்படி செய்வதால் அரிசி நீரில் உள்ள வைட்டமின், கனிமங்கள், சருமத்திற்கு நேரடியாக கிடைக்கிறது.

அரிசி நீரை காட்டன் துணியில் நனைத்து முகத்தில் தேய்த்து வந்தால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மறைந்து பளபளக்கும். மேலும் சூரிய கதிர்களால் ஏற்படும் கருமையை ஏற்படாமல் தடுக்கிறது. இந்த முறையை பயன்படுத்தினால் சருமத்தை புத்துணர்ச்சியோடு அதிக நேரம் வைத்திருக்க முடியும். இந்த அரிசி நீரானது சருமத்தில் க்ளின்சராக செயல்பட்டு சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றும்.

Share this story