தினம் பால் குடிப்பதை பழக்கமாக கொண்டுள்ளவர்கள் பழக்கத்தை விடலாமா ?

நாம் தினம் அருந்தும் ஒரு கிளாஸ் பாலில் இருக்கும் சத்துக்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கும் மற்றும் உள் உறுப்புகளின் வலிமைக்கும் மிகவும் பயன்பட கூடியது. இதனை ஒரு பழக்கமாக கொண்டு உள்ளவர்கள். திடீர் என்று அந்த பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று எண்ணுகிறீர்களா? இதை படித்து பாருங்க ? நிறுத்தலாமா வேணாமான்னு யோசிங்க !
பால் அருந்தும் பழக்கம்
தினம் ஒரு கிளாஸ் பால் :
உணவு உண்டபின் நாம் குடிக்கும் ஒரு கிளாஸ் பால் உணவுகளை விரைவில் செரிமானம் அடைய செய்து வயிற்றில் ஏற்படும் அனைத்து கோளாறுகளையும் தீர்க்கும் நல்லதொரு பானமாகவும் கருத படுகிறது
ஆரோக்கியம் :
உடல் வளர்ச்சிக்கும் மற்றும் உறுப்புகளின் வலிமைக்கும், எலும்புகள், பற்களின் வலிமைக்கும், நகம், முடி வளர்ச்சிக்கும் மிகவும் தேவையான தான் பால். இதனை குடிப்பதை தவிர்த்தால் மேற்கூறிய வளர்ச்சிகள் தடை பட்டு வலிமையை இழந்து பலவீனத்துடன் காண பட்டு சில இன்னல்களை சந்திக்க நேரிடும். திடீர் என்று பால் அருந்துவதை நிறுத்த ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம், புரத சத்துக்கள் போன்றவை பற்றாக்குறையால் வலிகள் ஏற்பட்டு பலவீனத்தை உணர்வீர்கள்.
பால் குடிக்க எடை குறையுமா?
பால் குடித்தால் எடை குறையும் என்பது இல்லை. இதற்கு பதிலாக பாதாம் பால் போன்ற சத்துள்ளவைகளை அருந்த நல்ல பலனை கொடுக்கும். எடை குறைகிறதோ இல்லையோ தினம் ஒரு கிளாஸ் பால் குடிக்க உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுத்து, ஆரோக்கியமான வாழ்வை தரும்.
பாலினை பற்றி தெரிந்து கொண்டு அருந்துங்கள்!
மாட்டு பாலில் இருக்கும் சத்துக்கள், பாக்கெட் பாலில் அல்லது மற்ற பால்களில் இருக்காது. மாட்டு பாலில் சரக்கரையின் அளவு குறைவாகவே காண படும் மற்ற பால்களை கணக்கிடும் பொழுது, ஆகையால் பாக்கெட் பாலினை அதிகம் குடிக்க அதில் இருக்கும் அதிக சர்க்கரை நம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். இது சர்க்கரை வியாதியை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. ஆகையால் தெரிந்து பாலினை அருந்துங்கள்.
மேற்கூறிய செய்திகளை தெரிந்து கொண்டு பால் அருந்துவதை திடிரென்று நீங்கள் நிறுத்த நமது ஆரோக்கியத்திற்கு கிடைக்க வேண்டிய சத்துக்கள் கிடைக்காது. அளவான முறையில் மேற்கொள்ளுங்கள்.