கேழ்வரகு ரத்த சோகையை குண படுத்துமா ?

ரத்த சோகை இன்று பலருக்கு ஏற்படும் நிலை உருவாகிறது. இதனை போக்க கேழ்வரகு கொண்டு தயாரிக்கப்படும் உணவு பொருட்களை சாப்பிட நல்லதாக அமையும். இன்று அனைவருமே ருசிக்காக சாப்பிடுவதையே விரும்புகிறார்கள், உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த உணவுகளை சாப்பிடுவதில்லை. அதில் மிக முக்கியமான ஒன்றே கேழ்வரகு.
மலச்சிக்கல் :
கேழ்வரகு கூழ் அல்லது உணவுகளை சாப்பிடுவதால் செரிமானம் சிறப்பாக நடைபெற்று மலச்சிக்கல் கோளாறுகள் நீங்கும் மற்றும் அதிக பருமனை கொண்டவர்கள் தங்கள் எடையை குறைக்க உண்ண வேண்டிய உணவுகளில் கேழ்வரகு உணவுகளை சாப்பிடலாம்.
ரத்தத்தின் சர்க்கரை அளவு :
கேழ்வரகு கொண்டு தயாரிக்க படும் கூழ் , தோசை, இட்லி, உப்புமா போன்றவைகளை சாப்பிட ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாக இருக்கும்.
இரும்புசத்து :
உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான இரும்புச்சத்துக்கள் இருக்கும் கேழ்வரகு ரத்த சோகைக்கு அருமையான உணவு மற்றும் இதில் இருக்கும் கால்சியம் எலும்புகளை வலு ஊட்டவும், கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதால் திடமான பலம் பெறலாம். விளையாட்டு வீரர்கள் எடுத்து கொள்ள ஆரோக்கியத்துடன் நல்ல உடல் வாகை பெறலாம்.
வயிற்று புண் :
வயிற்றில் ஏற்படும் புண்கள், குடல் புண்களை குண படுத்த தினமும் கேழ்வரகு கொண்டு தயாரிக்கப்படும் கூழினை குடிக்கலாம்.
செய்முறை :
கேழ்வரகை நீருடன் சேர்த்து கொஞ்சம் உப்பு கலந்து கலக்கி கொள்ளுங்கள். மிதமான தீயில் பாத்திரத்தை வைத்து கொதிக்கும் வரை கிளறி கொண்டே இருக்க வேண்டும். கெட்டிப்பதம் வந்தவுடன் இறக்கி விடுங்கள். ஆறியதும் நீரினை கலந்து அதனுடன் வெங்காயம், மிளகாய் சேர்த்து குடிக்க அறுசுவை உணவே.