சாக்லேட்டினால் சருமத்தில் ஏற்படும் இந்த பிரச்சனைகளை சரி செய்யலாமா?
Sun, 22 Apr 2018

சாக்லேட் பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். வீட்டில் குழந்தைகள் அதிகமாக சாக்லேட் சாப்பிட்டால் பெரியோர்கள் திட்டுவார்கள். ஆனால் சாக்லேட்டில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. அதை பற்றி இப்போது பார்க்கலாம்.
சாக்லேட்டின் நன்மைகள்:-
- சாக்லேட்டில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் மற்றும் விட்டமின்களை கொடுக்கிறது. பொதுவாக வறண்ட சருமம் உள்ளவர்கள் சாக்லேட் மாஸ்க் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- மாசு அதிகமாக உள்ள இடங்களில் பணிபுரிபவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை இந்த மாஸ்கினை செய்வதன் மூலம் நோய் தொற்று ஏற்படாமல் பார்த்து கொள்ள முடியும்.
- இதில் உள்ள அதிகப்படியான விட்டமின்கள் மற்றும் மினரல்ஸ்கள் ஆகியவை சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கி சருமத்தில் ஏற்படும் அலர்ஜி மற்றும் தேமலை சரி செய்யலாம்.
- சருமத்தில் உள்ள இறந்த செல்களை அழித்து புதிய செல்களை உருவாக்குகிறது. இதன் மூலம் சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.
- சாக்லேட்டை பாலுடன் கலந்து மாய்சரைசராக செய்து முகத்தில் தடவினால் சருமத்தில் ஏற்படும் அதிகப்படியான சுருக்கம் மற்றும் முதுமை தன்மையை குறைக்கிறது.
- முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை சரி செய்யவும் சாக்லேட் மாஸ்க் பயன்படுகிறது. சாக்லேட்டை பயன்படுத்தி ஸ்க்ரப் செய்து முகத்தை கழுவினால் சருமம் ஜொலிக்கும்.