கற்றாழை தெரியும்! சோற்று கற்றாழையின் மருத்துவம் தெரியுமா?
Sep 7, 2017, 12:30 IST

கற்றாழை முகத்தில் ஏற்பட கூடிய பருக்கள், தழும்புகள், எண்ணெய் பிசுக்குகள் நீங்க பயன்படுத்தலாம்.
சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் சோற்று கற்றாழையை பல முறை நன்கு கழுவ வேண்டும்.
சுத்தம் செய்த பின் இதனை உணவில் சேர்த்து கொள்ள செரிமான உறுப்புகள் உறுதி பெற்று நன்கு செயல் பட்டு செரிமானம் சிறப்பாக நடை பெறும்.
உடல் எடையை கட்டுக்குள் வைத்து கொள்ளவும் மிகவும் பயன்படுகிறது. நல்ல பசியை ஏற்படுத்தும்.
முடி வளர்ச்சி :
கற்றாழையின் பூக்களை பயன்படுத்த, அதன் சாற்றினை தலையில் முழுவதும் தடவி குளித்து வர முடி கொட்டுதல், பொடுகு தொல்லைகள், நீளமான முடி பெறலாம்.
- கால்களில் உருவாகும் வெடிப்புகள், பிளவுகள், பிளவுகளில் உண்டாகும் ரத்த போக்கு போன்றவற்றை குண படுத்த நல்லதொரு மருந்தாக கருத படுகிறது.
- வெயிலின் தாக்கத்தினால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு உடலில் கொப்புளங்கள் ஏற்படலாம் அதற்கு இதனை சாப்பிட நாளடைவில் மறையும்.
- வயது முதிர்ந்த பின் ஏற்படும் சோர்வு தன்மையை போக்கி சுறு சுறுப்புடன் செயல் பட செய்து நலமுடன் வைத்து கொள்ளும். உடலில் ஏற்படும் வலிகளையும் தடுத்து நிவர்த்தி தரும்.