6 பேக் கொண்டு உடலை அழகாக வைத்து உள்ளீர்களா!

ஆண்கள் தங்களை அழகு படுத்த செய்யும் உடற்பயிற்சியின் மூலம் 6 பேக் கொண்டு வருகிறார்கள். உடற்பயிற்சி செய்து தசைகளை அதிகரித்து உடலை உறுதியுடன் வைத்து கொள்ள உதவுகிறது. இதனால் ஆண்களுக்கு உடல் நல கோளாறுகள் உண்டாகுமா என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம்.
6 பேக் :
6 பேக் என்றாலே வயிற்றில் இருக்கும் தசைகளை வலு பெற செய்து உடலை அழகாக மாற்றுவது. 6 பேக் கொண்டு வருவது அவ்வளவு எளிது அல்ல, அதற்கான உடற்பயிற்சிகளை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் மற்றும் உணவுகளை மிகுந்த கட்டுப்பாடு வேண்டும் என்பதனால் அதிக முயற்சிகள் தேவை படும். இதனால் உங்களுக்கு குறைந்த அளவு கலோரிகள் இருக்கும் உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
கொழுப்பு இருக்கும் உணவுகளை அதிகம் உட்கொள்ள கூடாது என்று கூறுவார்கள். அதற்காக கொழுப்பு உணவுகளை சாப்பிடாமலே இருக்க கூடாது. ஒவ்வொருவரின் ஆரோக்கியத்திற்கும் கண்டிப்பாக கொழுப்புகள் அவசியம், ஆகவே போதுமான அளவில் எடுத்து கொள்ள வேண்டும்.
இன்று ஆண்களை போலவும் பெண்களும் 6 பேக் கொண்டு உள்ளார்கள். இதனால் அவர்களுக்கு உடல் நல கோளாறுகள் ஏற்படும், கருவுற்றிருக்கும் பொழுது பல இன்னல்களை சந்திக்க நேரிடும். உடல் எடையை அதிகரிக்க கூடாது என்று குறைந்த கொழுப்பு உணவுகளையே எடுத்து கொள்வார்கள், இதனால் உடல் விளைவுகளை ஏற்படுத்தும்.
விளைவுகள் :
தசை பிடிப்பு
தசை வலி
மன உளைச்சல்
சோர்வு பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம்
சீரற்ற குடல் செயல்பாடு
ஹார்மோன் சமச்சீரின்மை
திடீர் என்று செய்யும் உடற்பயிற்சிகள் வலிகளை ஏற்படுத்தி, காயங்களையும் ஏற்படுத்தும், அது ஆபத்தாக முடியும்.