முடிஉதிர்வை கட்டுப்படுத்த பொன்னாங்கண்ணி

முடிஉதிர்வை கட்டுப்படுத்த பொன்னாங்கண்ணி

முடி உதிர்வு, இள நரை போன்ற பிரச்சனைகளை பற்றி (முடி உதிர்வு குறைய சில வழிகள்
) இந்த தளத்தில் முன்பே கண்டோம். அதேபோல் தலை முடி பிரச்சனைகளுக்கு பலவிதமான வழிகளில் தீர்வுகளையும் பார்த்தோம். அதனுடன் பொன்னாங்கண்ணி கீரை கொண்டு தலைமுடி உதிர்வுக்கு எப்படி தீர்வு காணலாம் என்பதை இங்கு பார்க்கலாம். பொதுவாகவே பொன்னாங்கண்ணி கீரை நிறைய மருத்துவ நன்மை தரும் கீரையாகும். இது இயற்க்கையாகவே மிக குளிர்ச்சியானது. இந்த பொன்னாங்கண்ணி கீரை கொண்டு தையலம் தயாரித்து பயன்படுத்திவர தலைமுடி உதிர்வுக்கு தீர்வு காணலாம்.

பொன்னங்கண்ணி கீரையை வெய்யில் படாமல் நன்கு காய வைக்கவும். இதனுடன் நன்கு காய்ந்த அருகம்புல், செம்பருத்தி பூ எடுத்துக்கொள்ளவும். இதில் செம்பருத்தி பூ மற்றும் அருகம்புல் பத்து கிராமும், பொன்னாங்கண்ணி கீரை இருபது கிராமும் எடுத்து, அரை லிட்டர் தேங்காய் எண்ணையில் நன்கு காய்ச்சவும், அறிய பின் நல்ல சுத்தமான குவளையில் சேமித்து, தினம் பயன்படுத்தி வர, தலை முடி நல்ல வலுப்பெறும், முடி உதிர்வு குறையும், கண்கள் குளிர்ச்சி பெறும் மேலும் உடல் உஷ்ணம் தனியும்.

Share this story