சிறு கீரை கொடுக்கும் பெரிய பலன்கள்!!

சிறு கீரை கொடுக்கும் பெரிய பலன்கள்!!

சிறு கீரையில் இருக்கும் சுண்ணாம்பு சத்துக்கள், கொழுப்பு சத்துக்கள் உடலுக்கு அழகு சேர்க்க பயன்படுகிறது.

சிறு கீரையை சமைத்து சாப்பிடுவதால் அதில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் நம் உடலுக்கு நன்மை பயக்க கூடியதே.  வாயு தொல்லையால் அவதி படுவோர் தினம் சிறு கீரையை எடுத்து கொள்ள நல்ல பலனை காணலாம். வாத நோயில் இருந்து விடுபட சிறு கீரையை சமைத்து  அதனுடன் இஞ்சி, சீரகம், சோம்பு, வெள்ளைப்பூண்டு சேர்த்து உண்ண நாளடைவில் குணம் அடையும்.

காச நோயில் இருந்து விடு பட எண்ணுவோர் சிறுகீரையை உண்ண ஆரம்பியுங்கள். இதில் இருக்கும் புரத சத்துக்கள் ரத்தத்தில் இருக்கும் தொற்றுக்களை அழித்து ரத்த சோகையில் இருந்து நம்மை தற்காத்து கொள்ளும்.

கண் குறைபாடுகளை சரி செய்ய சிறு கீரை நல்ல ஒரு மருந்தாக கருதப்படும். மலச்சிக்கல் பிரச்சனையை போக்கவும் பயன்பட கூடியதே.

ரத்தம் கட்டுதல் அல்லது அடிபட்ட இடங்களில் ஏற்படும் வீக்கம் போன்றவற்றை குண படுத்த ஒரு நல்ல மருந்து தான் சிறு கீரை.

Share this story