Tamil Wealth

சருமத்தில் உண்டாகும் கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகளை நீக்க சிறந்த வழிகள்!

சருமத்தில் உண்டாகும் கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகளை நீக்க சிறந்த வழிகள்!

உணவு பழக்க வழக்கம் மற்றும் வேதி பொருட்களின் தாக்கத்தினால் சருமத்தில் வெண்புள்ளிகள் மற்றும் கரும்புள்ளிகள் உருவாகும். இதனை தடுக்கும் வகையில் நாம் பயன்படுத்த வேண்டிய சில விதிமுறைகளை காணலாம்.

ப்ரோபையோடிக்கள் :

ப்ரோபையோடிக்கள் இருக்கும் பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம். தயிரில் இது அதிகம் காண படுவதால் சருமத்தில் பயன்படுத்தலாம்.

தயிரை நன்கு நுரைத்து வைத்து கொள்ள வேண்டும். முகத்தை நீரினால் சுத்தம் செய்ய வேண்டும், இல்லையென்றால் பாலினை ஈர துணியில் நனைத்து முகத்தில் தோய்த்து சுத்தம் செய்ய வேண்டும் மற்றும் கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள் இருக்கும் இடங்களில் தொடர்ந்து தேய்த்து வர மாற்றத்தை காணலாம் மற்றும் சருமமும் பழைய நிலைக்கு திரும்பும், அழகை கொடுக்கும்.

நீர் சத்துக்கள் முக்கியம் :

வெண்புள்ளிகள், கரும்புள்ளிகள் வர காரணமே நம் உடலில் நீர் சத்துக்கள் குறைவாக இருப்பதினால் தான். சர்க்கரையை நீரில் நன்கு கலந்து அதனை சருமத்தில் பாதிப்பு இருக்கும் இடத்தில் தினம் உபயோகிக்க நல்ல பலனை தரும் அல்லது பாகு போல் காய்ச்சி பயன்படுத்த நிற மாற்றத்தை காணலாம்.

பழ வகைகளையும் பயன்படுத்த முகத்திற்கு நல்ல பொலிவையும் கொடுத்து சருமத்திற்கு பாதுகாப்பையும் தரும். ஆன்டிஆக்ஸிடென்ட்கள் இருக்கும் பழங்களை அதிகம் சாப்பிடுவதில் மூலமும் மற்றும் முகத்திற்கு பயன்படுத்துவதாலும் சருமத்தை பாதுகாக்கும் மற்றும் கோளாறுகள் வருவதை தடுத்து பராமரிக்கும்.

வேதி பொருட்களினை அதிகம் பயன்படுத்தலை தவிர்க்க வேண்டும் :

சருமத்திற்கு பயன்படுத்தும் சோப்பு, பேசியல், பேஸ் வாஷ் போன்றவைகளை அதிகம் உபயோகிப்பதினால் முகத்தில் பாதிப்புகள் உருவாகும் மற்றும் தழும்புகள், காயங்கள், ரத்த கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது. முகத்திற்கு பயன்படுத்தும் துணிகளை நன்கு சுத்தம் செய்து பின் உபயோகியுங்கள்.

Share this story