கிவிப் பழத்தில் இவ்வளவு நன்மைகளா?

சிட்ரஸ் வகைப் பழங்களில் ஆரஞ்சு, எலுமிச்சை, தக்காளி போன்றவைகள் இருப்பது அனைவருக்கும் தெரியும். அந்தவகையில் கிவி பழமும் சிட்ரஸ் வகைப் பழங்களில் ஒன்றாகும். கிவிப் பழம் புளிப்புச் சுவை கொண்டது என்பதால் அதனைப் பெரிதாக யாரும் வாங்கிச் சாப்பிடுவது கிடையாது.
இந்த கிவி பழம் சாப்பிட்டால் என்ன மாதிரியான பயன்கள் கிடைக்கும் என்பதை நாம் இப்போது பார்க்கலாம். கிவிப் பழத்தில் அதிக அளவிலான கனிமச்சத்துக்கள் உள்ளன.
மேலும் கிவிப் பழத்தில் கால்சியம், செரடோனின், வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலங்கள் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் இது புற்றுநோய், இரத்த சர்க்கரை, ஆஸ்துமா, கண் பார்வைத் திறன் போன்றவற்றிற்கு மருந்தாக உள்ளது.
நல்ல தூக்கம் பெறவும், மலச்சிக்கல் மற்றும் இரத்த அழுத்தப் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாகவும் இது இருக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கர்ப்பிணிகளுக்கு கொடுப்பதற்கு மிகச் சிறந்த உணவாகவும், விரைவில் கர்ப்பம் தரிக்கவும் உதவுகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.
இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்த தீர்வாகவும் இருக்கிறது. இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியினை அதிகரிப்பதோடு இதில் உள்ள நார்ச்சத்துகள் உடல் எடையினைக் குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.