Tamil Wealth

குளிர்ந்த நீரினால் தினம் முகத்தை கழுவ கிடைக்கும் நன்மைகள் !

குளிர்ந்த நீரினால் தினம் முகத்தை கழுவ கிடைக்கும் நன்மைகள் !

முக கோளாறுகள் :

  • சிறு வயதிலே சுருக்கங்கள்
    வயது முதிர்ந்த தோற்றம்
    பருக்கள்
    முக சோர்வு
    கருவளையம்

மேற்கூறியவை வராமல் தடுக்கவும் மற்றும் இதர சரும கோளாறுகளை தடுக்கவும் மிகவும் எளிதான முறை தான் குளிர்ந்த நீரினை கொன்டு தினம் முகத்தை கழுவுதல்.

  1. இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தொலைக்காட்சி பார்ப்பது அல்லது மடிக்கணினியை அதிகம் உபயோகிப்பது போன்றவற்றால் கண்களுக்கு ஓய்வு இருக்காது, அதற்கு கண்களை அடிக்கடி குளிர்ந்த நீரினால் கழுவ கண்களை பாதுகாக்கும்.
  2. முகத்தில் சீக்கிரமே சுருக்கங்கள் வருகிறதா, தினம் நான்கு அல்லது ஐந்து முறை முகத்தை குளிர்ந்த நீரினை கொண்டு சுத்தம் செய்யுங்கள்.
    முகத்தை மட்டுமல்லாது கை, கால்களையும் அவ்வப்போது கழுவ வேண்டும். இதனால் நோய் தொற்றுகள் எதுவும் நம்மை அணுகாது.
  3. முகத்தில் ஈர பதம் குறைவாக இருப்பதே பருக்கள், எண்ணெய் கசடுகள் வர காரணம் இதற்கு அடிக்கடி முகத்தை கழுவுவதால் முகம் குளிர்ச்சி அடைந்து தொற்றுக்களை தடுக்கும்.
  4. வெயிலின் தாக்கத்தினால் உடலில் ரத்த ஓட்டம் சீராக அமையாது. இதற்கு தினம் அதிக நீரினை அருந்துவதை பழக்கமாக்கி கொள்ளுங்கள்.
    இது உடலுக்கு குளிர்ச்சியை கொடுத்து அதிகமான சூட்டினால் உடலுக்கு எவ்வித கேடுகளும் வராமல் தடுக்கிறது.  சீக்கிரமே உருவாகும் வயது முதிர்ந்த தோற்றத்தை தடுக்க அடிக்கடி முகத்தை நீரில் கழுவுங்கள். இப்படி தொடர்ந்து செய்வதால் தினம் முகத்தில் சேரும் அழுக்குகள் மற்றும் கிருமிகள் நீங்கி முகம் எப்பொழுதும் பொலிவுடன் காண படும் மற்றும் கண்களில் ஏற்படும் கருவளையமும் வராது.
  5. முகத்தில் ஏற்படும் சோர்வு நிலையால் முக அழகே கெடும். இதனை போக்கவும் காலை எழுந்தவுடன், கணினி உபயோகித்த பின், வெளியே சென்று வந்த பின்னர் போன்ற நேரங்களில் முகத்தை கண்டிப்பாக சுத்த செய்ய வேண்டும்.

Share this story