மண்ணுக்கடியில் விளையும் காய்கறிகளின் நன்மைகள்

மண்ணுக்கடியில் விளையும் காய்கறிகளின் நன்மைகள்

பூமிக்கு அடியில் விளையும் காய்கறிகள் எல்லோரும் சாப்பிடுவார்களா என்று கேட்டால் இல்லை தான். அதற்கு காரணம் இவற்றை சாப்பிட்டால் எடை அதிகரிக்கும் என்பது மட்டும் தான். இதைத்தவிர அவற்றில் முக்கிய சத்துகள் நிறைந்துள்ளன. அதை இப்போது பார்க்கலாம்.

மண்ணுக்கடியில் விளையும் காய்கறிகளின் நன்மைகள்:-

  • பீட்ரூட் சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கறையும். மலச்சிக்கலை குணப்படுத்தி, உடலுக்கு புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.
  • சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கவும், கர்ப்பிணிகள் பெண்களுக்கு ஏற்படும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.
  • முள்ளங்கி பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை. ஆனால் அதை சாப்பிட்டால் தொண்டை சம்பந்தமான நோய்களை குணமாக்குவதுடன் பசியை தூண்டுகிறது.
  • முள்ளங்கி நோய் எதிர்ப்பு சக்தியையும் உடலுக்கு தேவையான வைட்டமின், தாது உப்புகளும் உள்ளன.
  • கேரட் சப்பிடுவதால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். மார்பகம், கல்லீரல், பாதிப்பு மற்றும் மாலைக்கண் வருவதை தடுக்கலாம்.
  • இஞ்சி இரைப்பைக்கு பலம் சேர்க்கும். பசியை தூண்டுவதோடு அஜீரணத்தை போக்கும்.

கருணைக் கிழங்கு சாப்பிடுவதால் கபம், வாதம்,மூலம், மூளை ஆகியவற்றை குணப்படுத்தும்.

Share this story