ஐஸ் கட்டியை சருமத்தில் பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகள்!

ஐஸ் கட்டியை சருமத்தில் பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகள்!

ஐஸ் கட்டியை பெரும்பாலும் குளிர்பானங்களில் தான் உபயோகிப்பார்கள். இதனால் உடலுக்கு சிறிது குளிர்ச்சியான உணர்வு ஏற்படுகிறது. ஐஸ் கட்டியை சருமத்தில் பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

ஐஸ் கட்டியை சருமத்தில் பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகள்:-

  • சருமத்தில் உள்ள துளைகளை அடைக்க உதவுகிறது. முகத்தில் ஐஸ் கட்டியை பயன்படுத்துவதால் பெரிய துவாரங்களை அளவை குறைத்து இறுக்குகிறது.
  • அழகு சாதன பொருள்களை பயன்படுத்துவதற்கு முன்னர் ஐஸ் கட்டியை முகத்தில் தடவி பயன்படுத்தினால் சருமத்தை பதனிடுகிறது.
  • ஐஸ் கட்டியை சருமத்திற்கு பயன்படுத்தினால் இரத்த குழாய்கள் சுருங்கும். இதன் காரணமாக சரும மேற்பரப்பில் குறைந்த அளவிலான இரத்தம் செல்லும். அதன் பின்னர் அந்த பகுதியில் வெப்பமான இரத்தம் சென்று இரத்த ஓட்டம் சீராகிறது.
  • கண்களில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க ஐஸ் கட்டியை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். பருக்களினால் முகத்தில் ஏற்படும் சிகப்பு நிற புள்ளிகள் சரியாகும். அழற்சி ஏற்படுவது குறையும்.
  • சருமத்தின் மேற்பரப்பில் இதை பயன்படுத்துவதால் நுண்ணுயி எதிர்ப்பியாகவும், ஆண்டி-பயாடிக்ஸ் ஆகவும் பயன்படுகிறது.
  • ஐஸ் கட்டியை சருமத்திற்கு பயன்படுத்தினால் வெயிலினால் ஏற்படும் கருமையை சரி செய்து தற்காலிக நிவாரணம் தருகிறது.

முகத்தை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு துணியில் ஐஸ் கட்டிகளை போட்டு முகத்தில் தடவி 2 நிமிடம் பயன்படுத்தினால் சருமம் மென்மையாகும்.

Share this story