Tamil Wealth

மாதுளம் பழத்தின் நன்மைகள் இத்தனையா?

மாதுளம் பழத்தின் நன்மைகள் இத்தனையா?

மாதுளம் பழத்தின் நன்மைகளை சில வரிகளில் சொல்லிவிட முடியாது, ஏனெனில் அந்த அளவு பல ஆயிரக் கணக்கிலான பலன்களை அது கொண்டுள்ளது. அதாவது மாதுளம் பழமானது ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்கிறது. அவ்வாறு ஹீமோகுளோபின் அதிகரிப்பதால் நமது தலைமுடியின் வேர்க்கால்கள் உறுதியாகின்றது.

இதனால் தலைமுடியானது உதிராமல் இருக்கச் செய்யும். மேலும் மாதுளம் பழத்தில் உள்ள அதிக அளவிலான வைட்டமின்களானது முடியைப்  பளபளப்பாகச் செய்கின்றது. மேலும்  இதில் உள்ள வைட்டமின்கள் காரணமாக இதனை கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கர்ப்பிணிப் பெண்கள் மாதுளம் பழத்தினை எடுத்துக் கொள்ளும்போது உடல் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அதிகரிக்கச் செய்கின்றது.

இதனால் பிரசவத்தின்போது இழக்கப்படும் இரத்தமும் ஈடுகட்ட செய்கிறது. இதனால் கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு மாதுளம்பழத்தினையோ அல்லது மாதுளம் பழச்சாறினையோ குடிக்க வேண்டும். மேலும் மாதுளம் பழமானது பெண்களின் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைச் சரி செய்கின்றது, மேலும் ஒபேசிட்டி பிரச்சினை உள்ளவர்கள் மாதுளம்பழத்தினை எடுத்துக் கொள்ளும்போது தேவையற்றக் கொழுப்புகள் கரையச் செய்கின்றது.

குழந்தைகளுக்கு 1 வயது முடிந்த பின்னர் இருந்தே மாதுளம்பழத்தை உண்ணக் கொடுப்பதால்  குழந்தைகளின் உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கச் செய்யும்.

Share this story