Tamil Wealth

புளியாரை கீரை தரும் நலன்கள்!

புளியாரை கீரை தரும் நலன்கள்!
  • கீரை வகை என்றாலே அது நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் அதைவிட நம் கண்களுக்கு கொடுக்கும் பலன்கள் அதிகமே.

புளியாரை கீரை :

கீரையை வேக வைத்து சாப்பிடுங்கள் அல்லது கெட்டி பதமாக துவையல் அரைத்து சாப்பிட தலை வலி, மயக்கம் போன்றவை நம்மை அணுகாது.

அதிகமான வெப்பத்தினால் உடலில் உருவாகும் கட்டிகள், கொப்புளங்கள் குணம் ஆக புளியாரை கீரையின் சாற்றினை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.
பார்வை கோளாறுகளை சரி செய்ய இதன் கீரைகளை சாப்பிட வேண்டும் என்று இல்லாமலால், கீரையை நீருடன் சேர்த்து காய்ச்சி வடிகட்டி அந்த நீரை கொண்டு தினம் கண்களை சுத்தம் செய்ய வேண்டும். இதனால் கண்களில் இருக்கும் நரம்புகள், விழித்திரை பாதிக்க படாது.
உடலில் ஏற்படும் நச்சு தன்மையை அழித்து நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும், காய்ச்சலுக்கு பயன்படுத்தலாம், மலச்சிக்கல் கோளாறுகளை நீக்கும்.

பசியின்மையால் அவதி படுவோர் புளியாரை கீரையை சமைத்து அதனுடன் மிளகு, இஞ்சி என சேர்த்து சாப்பிட நல்ல பசி எடுக்கும்.

Share this story