பசலைக் கீரை மற்றும் பீச் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஜூஸின் நன்மைகள்!

பசலைக் கீரை மற்றும் பீச் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஜூஸின் நன்மைகள்!

இயற்கையாகவே கீரையில் அதிக அளவிலான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இத்துடன் பீச் பழத்தை சேர்த்து தயாரிக்கப்படும் ஜூஸின் மூலம்  என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று இப்போது பார்க்கலாம்.

ஜூஸ் தயரிக்கும் முறை:-

கீரை மற்றும் பீச் பழத்தை நன்றாக கழவி எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் பீச் பழத்தின் விதைகளை முழுவதுமாக நீக்கிவிட வேண்டும். பின்னர் இரண்டையும் மிக்ஸியில் அரைத்து கடைசியாக நீர் சேர்த்து கொள்ள வேண்டும். விருப்பப்பட்டால் சிறிதவு இஞ்சியை சேர்த்து கொள்ளலாம்.

ஜூஸின் நன்மைகள்:-

  • பீச் மற்றும் பசலைக் கீரை பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த ஜூஸை குடிப்பதால் வைட்டமின் ஏ, பி, பி1, பி2, சி, ஈ, ஜே மற்றும் கே போன்ற சத்துகள் நமக்கு கிடைக்கிறது.
  • இதை தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைக்கலாம்.
  • உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை தொடர்ந்து குடிப்பதால் இரத்த அழுத்தம் குறையும். மேலும் இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது.
  • செரிமான மண்டலத்தினை சீராக்கி செரிமானத்தை அதிகரிக்க முடியும். இதயம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம்.
  • நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவடைய செய்கிறது.

Share this story