பலாப்பழத்தில் உள்ள நன்மைகள் இவைகளா?

மா, பலா, வாழை என முக்கனிகளைப் பிடிக்காதவர்கள் யாரேனும் இருப்பார்களா? அந்த முக்கனிகளில் ஒன்றான பலாப் பழத்தின் மருத்துவ குணங்கள் குறித்து நாம் இப்போது பார்க்கலாம்.
பலாவில் ஆசினிப்பலா, கூழைப்பலா, வருக்கைப்பலா என பல வகைகள் இருப்பது நம்மில் பலருக்குத் தெரியாது. பலாப் பழவாய்ப்புண் வயிற்றுப்புண், குடற்புண் போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கின்றது.
மேலும் பலாப் பழமானது பல்வலியினை நீக்குவதாக உள்ளது, மேலும் ஆப்பிளினைப் போல் இரத்தத்தை அதிக அளவில் உற்பத்தி செய்யக்கூடியது. மேலும் இது நரம்பு மண்டலத்தினை வலுப்படுத்துவதாக உள்ளது.
மேலும் பலாப் பழத்தினை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் இரத்த்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பதோடு, ஜீரண சக்தியும் அதிகரிக்கின்றது. இதனால் உடல் மெலிந்தவர்கள், நோயாளிகள், குழந்தைகள் என அனைவரும் பலாப் பழத்தினை தேனில் ஊறவைத்து சாப்பிடுவது சிறந்தது.
மேலும் பலாப்பழமானது விட்டமின் ஏ சத்துகளைக் கொண்டதாகவும் உள்ளது, மேலும் இது மூளையினை வலுப்படுத்துவதாகவும், மூளை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாகவும் இருக்கின்றது.
வயிற்றுப் பொருமல், ஒவ்வாமை, வாயுத் தொல்லை போன்ற பிரச்சினைகளுக்கும் நீங்கும். இதனால் குழந்தைகள் வயிற்று வலியால் அழுதால் பலாப் பழத்தினைக் கொடுத்தால் நிச்சயம் சரியாகிவிடும்.