கொய்யா இலைகள் மூலம் கிடைக்கும் பலன்கள்!!
Fri, 1 Sep 2017

கொய்யா கனியை போலவே அதன் இலைகளும் நமக்கு நன்மை தர கூடியதே.
நன்மைகள் :
பாலிஃபீனால்கள், கரோட்டினாய்டுகள், ப்ளேவோனாய்டுகள் அடங்கி உள்ளதால் இது நமக்கு பல்வேறு நோய்களிடம் இருந்து நம்மை தற்காத்து கொள்கிறது.
- கொய்யா இலைகளிலும் சுவை இருக்கும் அதன் சாற்றை பிழிந்து அதனுடன் சர்க்கரை அல்லது கற்கண்டு, தேன் கலந்து சாப்பிட நமது வயிற்றில் ஏற்படும் செரிமான கோளாறுகள் அனைத்தும் தீரும்.
- ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருக்கும் கொய்யா இலைகள் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு திறனை கொடுக்கும் வல்லமை கொண்டது.
வாயில் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் பற்களில் ஏற்படும் வலி அனைத்திற்கும் கொய்யா இலைகளில் இருக்கும் மருந்து பொருட்கள் பயன்படுகின்றன.
இதய கோளாறுகள், காய்ச்சல், தொடர் இருமல், சளி தொல்லை போன்ற அனைத்திற்கும் இது நல்ல மருந்து. முடி கொட்டுதல் மற்றும் பலவீனம் அடைதல் போன்ற பிரச்சனைக்கு கொய்யா இலைகளின் சாற்றை வெந்நீரில் கலந்து தலையில் தேய்த்து வர நல்ல பலனை காணலாம்.