திராட்சையில் உள்ள மருத்துவ குணங்கள்!!

திராட்சைப் பழமானது பலருக்கு தெரியாத பல வகையான சத்துக்களை கொண்டதாக உள்ளது, அதாவது திராட்சைப் பழமானது இரத்த அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பதாக உள்ளது.
மேலும் திராட்சை பழமானது கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக அளவில் பரிந்துரைக்கப்படுகின்றது. காரணம் கர்ப்பிணிப் பெண்களின் ஹீமோகுளோபின் ஆனது பிரசவ காலங்களில் அதிகமாக இருக்க வேண்டும், அவ்வாறு இல்லாமல் குறைவான ஹீமோகுளோபின் கொண்டவர்கள் தினசரிக்கு திராட்சைப் பழத்தினை எடுத்துக் கொள்வது நல்லது.
மேலும் திராட்சைப் பழத்தையோ அல்லது சாறினையோ நாம் குழந்தைகளுக்கு கொடுத்து வருதல் வேண்டும், அவ்வாறு கொடுத்து வந்தால் குழந்தைகளின் நோயெதிர்ப்பு மண்டலம் சிறப்பாக செயல்படும்.
மேலும் கருப்பு உலர் திராட்சையினை நாம் காசு கொடுத்து வாங்காமல், வீட்டில் மீந்துபோன திராட்சைகளை காயவைத்து எதிர்காலத்தில் பயன்படுத்தவும் செய்யலாம். மேலும் கருப்பு திராட்சையானது சர்க்கரை நோயாளிகளுக்கும் பரிந்துரைக்கப்படுகின்றது.
அதற்குக் காரணம் திராட்சை பழம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினைக் குறைப்பதாய் உள்ளது. இது புற்றுநோய் வராமல் தடுப்பதாகவும் உள்ளது. அதேபோல் உடல் எடையினைக் குறைக்க நினைக்கப் பலரும் திராட்சைப் பழத்தினை எடுத்துக் கொள்வது நல்லது.