பூண்டில் உள்ள மருத்துவ குணங்கள் தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க!!

பூண்டு குறித்த அடிப்படையான விஷயங்களில் ஒன்று செரிமான சக்தியினை மேம்படுத்துதல். இதனால்தான் எந்தக் குழம்பாக இருந்தாலும் சரி, அதில் பூண்டினை சேர்க்கின்றனர்.
பூண்டில் வேறு எந்தமாதிரியான மருத்துவ குணங்கள் உள்ளன என்பது குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். அதாவது பூண்டை குழம்பில், இரசத்தில் போட்டு சாப்பிடுவதைவிட வெறும் வயிற்றில் காலையில் சாப்பிடுவது சிறப்பானது.
பூண்டானது வாயுத் தொல்லை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு முழுத் தீர்வாக அமைகின்றது, மேலும் இது கர்ப்பிணி மற்றும் பிரசவித்த பெண்களுக்கு சிறந்த உணவுப் பொருளாக இருந்து வருகின்றது. அதாவது பூண்டு சாப்பிட்டு வந்தால் பிரசவித்த பெண்களுக்கு பால் அதிகமாக சுரக்கும்.
மேலும் இது வயிற்றில் உள்ள நச்சுக்களை நீக்குவதாக உள்ளதால், குழந்தைகளின் உணவில் தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது. மேலும் இது புற்றுநோய் தடுப்புப் பொருளாகவும் உள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் உடல் மெலிந்தவர்கள், நோயாளிகள் என அனைவருக்கும் பூண்டினை தேனில் ஊறவைத்து சாப்பிடக் கொடுப்பது சிறந்த தீர்வாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
மேலும் உடற்பயிற்சி செய்பவர்களும், குழந்தைகளுக்கும் தேனில் ஊறவைத்த பூண்டினை சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுகின்றது.