முந்திரி தினம் சாப்பிட கிடைக்கும் பலன்!!
Sep 1, 2017, 15:40 IST

அனைத்து இனிப்பு உணவுகளிலும், விழாக்களிலும் பயன்படும் இந்த முந்திரி. நாம் தினமும் இரண்டு அல்லது மூன்று முந்திரிகள் சாப்பிட நமக்கு கிடைக்கும் ஆரோக்கியம் பற்பல.
முந்திரியின் ஆரோக்கியம் :
இரவில் தூக்கம் இன்றி அவதி படுவோர் தினம் மூன்று முந்திரியை சாப்பிடுங்கள் நல்ல உறக்கத்தை பெறலாம்.
- குழந்தைகள் சிறு வயதிலே சாப்பிட பழக்க நல்ல வளர்ச்சியை பெறுவார்கள். செரிமான கோளாறுகள் நீங்கும்.
இப்படி தொடர்ந்து முந்திரி சாப்பிடுவதால் உடல் சீராக அமைவதோடு உடல் எடையும் குறையும்.
- எலும்புகளின் உறுதிக்கும் மற்றும் பற்களில் ஏற்படும் தொற்றுகளுக்கும் முந்திரியில் இருக்கும் கால்சிய சத்துக்கள் பயன்படுகிறது.
கல்லடைப்பால் பாதிக்க பட்டவர்கள் தினம் இதை உட்கொள்ள நல்ல பலனை கொடுக்கும் சக்தி கொண்டது.
- ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து ரத்த ஓட்டத்தை சிறப்பாக நடைபெற செய்யும் மற்றும் இதய கோளாறுகளை அனைத்திற்கும் நல்ல தீர்வை கொடுக்கும்.
- முடி வளர்ச்சி குறைவாக இருந்தால் முந்திரி தினம் சாப்பிடலாம். புற்று நோய்க்கான தொற்றுகள் உருவாவதை தடுக்கும்.