நில வேம்பு கஷாயம் குடிக்க கிடைக்கும் நன்மைகள்!
Sep 6, 2017, 12:00 IST

- காய்ச்சலால் பாதிக்க பட்டவர்களுக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் நில வேம்பு கசாயத்தில் அடங்கி உள்ளன. நில வேம்பை அரைத்து அதனுடன் நீர் விட்டு கொதிக்க வைத்து பின் நீரை தனியே பிரித்தெடுத்து தினம் அதனை அருந்தி வர காய்ச்சல் குறைந்து அதனால் உடலில் ஏற்பட்டிருக்கும் கிருமிகளை அழிக்கும் மற்றும் ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.
- தைராய்டு பிரச்சனைகள் நம்மை பாதிக்காமல் காக்கும் திறனை கொண்டது இந்த கஷாயம்.
- கஷாயத்தை தினம் குடிக்க செரிமான உறுப்புகள் பலம் பெற்று செரிமான கோளாறுகள் எதுவும் அணுகாது.
- பித்தம், வாந்தி, மயக்கம் போன்றவைகள் ஏற்படாமல் அதனால் வர கூடிய பக்க விளைவுகள் எதுவும் வராமல் காத்துக்கொள்ளும்.
- இதனை தொடர்ந்து குடிக்க பல வித நோய் தொற்றுகளிடம் இருந்து பராமரிக்கிறது.
- வேர்கள் போலவே அதன் இலைகளையும் நீருடன் சேர்த்து கொதிக்க வைத்து பின் நீரை மட்டும் அருந்த வயிற்றில் ஏற்படும் கோளாறுகள், புழுக்கள், புண்கள் ஆகிவற்றிக்கு நல்லதொரு அருமருந்தாக கருத படுகிறது.