Tamil Wealth

சீரக நீர் அருந்த கிடைக்கும் நன்மைகள் தெரிந்து அருந்தலாம்!

சீரக நீர் அருந்த கிடைக்கும் நன்மைகள் தெரிந்து அருந்தலாம்!
செய்முறை :

சீரகத்தை சிறிதளவு எடுத்தால் போதுமானது. அதனுடன் தேவையான அளவு தண்ணீரை கலந்து பாத்திரத்தை அடுப்பில் வைத்து அது நன்கு கொதித்த பின்னரே இறக்க வேண்டும்.

சீரகத்தில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் உறிஞ்ச பட்டு நீருடன் கலந்து இருக்கும். இதனை சூடாகவோ அல்லது நன்கு ஆறிய பிறகு அருந்தலாம். இது உடல் ஆரோக்கியத்தை தர கூடியது.

எப்பொழுது குடிக்கலாம் கிடைக்கும் நன்மைகள் பார்க்கலாம்:

இந்த சீராக தண்ணீரை காலை எழுந்தவுடன் அருந்த வயிற்று கோளாறுகளை நீக்கும் மற்றும் வாந்தி, தலை சுத்தல், வாயு கோளாறுகள் போன்றவற்றை நீக்கும் வல்லமை கொண்டது. உடலில் இருக்கும் நச்சு கிருமிகளை அழித்து உடலை பேணி பாதுகாக்கிறது.

குடல்களின் பராமரிப்புக்கும் உகந்த வகையில் அமைந்ததே இந்த சீரக நீர். தினம் நாம் அருந்தும் சாதாரண நீருக்கு பதிலாக சீரக நீரினை அருந்த உடல் உள் உறுப்புகள் பலம் பெறுவதோடு, சரும கோளாறுகளையும் நீக்கி வயதான தோற்றத்தை கொடுக்காமல் இளமையான பொலிவுடன் பிரதிபலிக்க செய்கிறது. இத்தகைய ஆற்றல் கொண்ட சீரக நீர் மூளையின் செயல் திறனை அதிகரித்து நினைவாற்றலை அதிகரித்து திறம்பட செயல் ஆற்றுகிறது.

Share this story