தேங்காய் நார் கொடுக்கும் நன்மைகள்!

தேங்காய் நாரில் இருக்கும் நன்மைகள் :
தேங்காயை உரித்து பயன்படுத்தி அதன் நாரினை வீணாக்குகிறோம் அதன் மூலம் நமக்கு கிடைக்கும் சில நன்மைகள்.
நார் என்றாலே அது பல விதங்களில் பயன்படும் கயிறு திரிக்கவும் மற்றும் ஏதேனும் பளு தூக்கியாகவும் உதவுகிறது. இது அதிக அளவு தண்ணீரை உறிஞ்சி தக்க வைத்து கொண்டு தேவைப்படும் தாவரங்களுக்கு கொடுக்கும் வல்லமை கொண்டது.
எந்திரங்களின் பயன்பாட்டுக்கும் மற்றும் சிறு தொழில் முனைவோருக்கு பயன் உள்ள விதத்தில் அனைத்து பொருட்களும் தயாரிக்கும் முறையில் பயன்படுகிறது.
தேங்காய் நாரினை கொண்டு பாத்திரத்தில் இருக்கும் படிந்த அழுக்குகளை நீக்கவும் பயன்படுத்துகிறார்கள். இதனை வீணாக்குவதால் நமக்கு தீமை என்பதே கிடையாது, நார் கிடக்கும் இடத்தில் இருக்கும் செடி, கொடிகள் அனைத்திற்க்கும் பாதுகாப்பு கொடுத்து அவைகளின் வளர்ச்சிக்கு மிக உறுதுணையாக இருக்கிறது.
நாரில் இருக்கும் உறுதியை கொண்டு தயாரிக்கப்படும் கயிறுகள் அதிக பளு தூக்கும் இடங்களிலும், மரம் ஏறும் விதத்திலும் மிகவும் பயன் உள்ளதாக கருத படுகிறது.