ஆமணக்கு எண்ணெயின் நன்மைகள்!!

ஆமணக்கு எண்ணெய் தயாரிக்க மட்டும் பயன்டுவது இல்லை, மற்ற செடி கொடிகளையும் வளர்க்கும் விதமாகவும் பயன்படுகிறது.
ஆமணக்கின் இருக்கும் விதைகள் கொடுக்கும் நன்மைகள் போலவே அதன் காய்கள் இலைகளும் கொடுக்கின்றன. ஆமணக்கு எண்ணெயினை உட்கொள்வதே நல்லது. அதன் விதைகளை சாப்பிட கூடாது. அதில் அதிக அளவிலான விஷ தன்மைகள் உள்ளது. உயிரையும் பறிக்கும் அபாயம் ஏற்படும் கவனம் தேவை.
தோலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் மற்றும் உடலில் ஏற்படும் புண்களுக்கும் ஆமணக்கு இலைகளை பிழிந்து சாற்றை கொண்டு இறுக்க கட்டினால் விரைவில் குணம் அடையும். பேதியை குணமாக்கவும் இதன் பட்டைகள் மிகுந்த பயன் அளிக்க கூடியது. ஆமணக்கில் இருக்கும் கிளிசரைடுகள் அதிக மருத்துவ குணம் கொண்டதே.
ஆமணக்கு எண்ணெயில் புரதம் மற்றும் ஆல்கலாய்டுகள் உள்ளதால் அதிக மருத்துவ குணம் கொண்டதே. வளமற்ற மண்களை தாவர வளர்ச்சி கொண்ட மண்ணாக மாற்றும் வல்லமை கொண்டது. இதன் தண்டு பகுதிகள் நல்ல எரி பொருளாகவும் பயன்படுகிறது.