பாகற்காயில் உள்ள மருத்துவ குணங்கள் இத்தனையா?

பொதுவாக நாம் ஒரு கூட்டத்தில் எந்தக் காய் பிடிக்கும் என்று கேட்டால் பலவிதமான பதில்கள் வரலாம். ஆனால் பிடிக்காத காய் என்றால் 70 % பேர் சொல்லும் பதில்களில் பாகற்காயிற்கு முக்கிய இடம் உண்டு.
அந்த அளவில் பலருக்கும் பாகற்காயானது பிடிக்காததாக இருந்து வருகிறது. தற்போது நாம் பலருக்கும் பிடிக்காத பாகற்காயில் உள்ள சத்துகள் குறித்துப் பார்க்கலாம். அதாவது பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த காயாக கருதப்படுகிறது.
பாகற்காயில் உள்ள ஒரு வேதிப் பொருள் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கிறது. இதனால் வாரம் இரண்டுமுறை சர்க்கரை நோயாளிகள் பாகற்காயினை எடுத்துக் கொள்ளுதல் நல்லது.
பாகற்காயினை பொரியல், குழம்பு, கூட்டு, வறுவல் என்று செய்து சாப்பிடுவதைவிட ஜூஸாக குடிப்பது மிகச் சிறந்த பலனைக் கொடுக்கும். அதாவது பாகற்காய் ஜூஸ் ஆனது கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக உள்ளது.
பாகற்காயில் அதிக அளவு நார்ச்சத்துகள் இருப்பதால் ஒபேசிட்டி பிரச்சினை உள்ளவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் இது செரிமானத்திற்கு உதவுவதாகவும் உள்ளது. மேலும் பாகற்காய், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் நீக்குவதற்கு உதவுகிறது. இதனால் உடல் எடையினைக் குறைக்க நினைப்போர் பாகற்காயினை எடுத்துக் கொண்டால் சிறந்த பலன் கிடைக்கும்.