நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் கிடைக்கும் நன்மைகள்!

நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் கிடைக்கும் நன்மைகள்!

சில வருடங்களுக்கு முன்னர் வீட்டில் உள்ள பெரியோர்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்து குளிப்பார்கள். அதுமட்டுமின்றி நம்மையும் குளிக்க சொல்வார்கள். குறிப்பாக நல்லெண்ணெய் மட்டுமில்லாமல் அத்துடன் பூண்டு, மிளகு, சீரகம், சுக்கு எல்லாவற்றையும் சேர்த்து தலை மற்றும் உடலில் தேய்த்து குளிப்பார்கள். இதனால் அவர்கள் எந்த வித நோயுமின்றி வாழ்ந்தார்கள். ஆனால் இப்போது அந்த பழக்கம் முற்றிலுமாக மறைந்து விட்டது. வாரத்திற்கு ஒருமுறை நல்லெண்ணெயை தேய்த்து குளித்தால் ஏற்படும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

  • நல்லெண்ணெயில் தலைமுடிக்கு தேவையான அனைத்து சத்துகளையும் அளித்து முடியினை அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர செய்கிறது.
  • நல்லெணெயினை பயன்படுத்தி வாரத்திற்கு ஒருமுறை தலைக்கு குளித்து வந்தால் உடலில் உள்ள அதிகப்படியான சூடு குறையும்.
  • பொடுகு தொல்லை இருந்தால் நல்லெண்ணெய் குளியல் செய்தாலே போதும். பொடுகு தொல்லை முற்றிலும் குறையும்.
  • நல்லெண்ணெயை தேய்த்து குளித்து வந்தால் கண்கள் சிகப்பாகி பார்வை குறைவது போன்ற பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
  • நல்லெண்ணெயை பயன்படுத்தி குளித்து வந்தால் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் கூட நல்ல ஆழ்ந்த தூக்கத்தை பெற முடியும். மேலும் உடல் சருமம் அழகாக காட்சியளிக்கவும் உதவுகிறது.

 

 

Share this story