அவகேடா பழத்தின் நன்மைகள் இத்தனையா?

அவகேடா பழத்தினை நாம் பெரிதாக ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம், மாதுளை போன்ற பழங்களை விரும்பி வாங்கிச் சாப்பிடுவதுபோல் இதனைச் சாப்பிடுவதில்லை. இதற்குக் காரணம் இதில் உள்ள சத்துகள் குறித்து நாம் அறியாததால் தான் ஆகும்.
அவகேடா பழமானது நமது உடலில் இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டதாக உள்ளது, இதனால் மருத்துவர்கள் அவகேடாவை இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு பரிந்துரைக்கிறார்கள். இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் வாரத்தில் 3 நாட்கள் இப்பழத்தினை எடுத்துக் கொண்டால் நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள்.
மேலும் ஒபேசிட்டி பிரச்சினை உள்ளவர்களுக்கும் அவகேடோ பழமானது பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களைக் குறைத்து ஒபேசிட்டி பிரச்சினைக்கு தீர்வாக இருக்கின்றது.
மேலும் நீரிழிவு நோய் என்னும் சர்க்கரை நோய் கொண்டவர்களுக்கும் அவகேடோ பழமானது பரிந்துரைக்கப்படுகின்றது. அதாவது இது உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க இது உதவுகிறது. இதனால் சர்க்கரை நோயாளிகள் இதனை வாரம் 3 மூன்று முறை எடுத்துக் கொள்வது நல்லது.
குழந்தைகளுக்கு வயிறு சம்பந்தமான செரிமான பிரச்சினைகள் இருப்பின், அவகேடா பழத்தை அரைத்து ஜூஸாக கொடுத்தால் செரிமானப் பிரச்சினைகள் உடனே சரியாகும். மேலும் இது புற்றுநோய் வரமால் தடுக்கும் என்றும் கூறப்படுகிறது.