தோப்புக்கரணம் செய்யுங்கள் நன்மை பெறுங்கள்!

தினம் தோப்புக்கரணம் உடற்பயிற்சியை செய்ய மூளை சிறப்பாக செயல் படும். நமக்கு நினைவாற்றலை அதிகம் கொடுத்து யோசிக்கும் திறனை சம நிலையில் வைக்கும்.
தோப்புக்கரணம் போடலாமே?
தோப்புக்கரணம் தினம் சிறிது நேரம் செய்ய வலது மூளை இடது மூளை இரண்டும் நன்கு சீராக செயல் பட்டு நினைவு திறனை அதிகரிக்கும்.
தோப்புக்கரணம் என்பதே இரு கைகளையும் கொண்டு இரு காதுகளையும் பிடித்து கொண்டு உட்கார்ந்து உட்கார்ந்து எழ வேண்டும்.
உட்கார்ந்து எழுவது :
தோப்புக்கரணம் செய்யும் போது அடிக்கடி உட்கார்ந்து எழும்புவதால் சுவாச உறுப்புகள் சீராக அமையும். இதனால் நமக்கு தேவையான ஆக்ஸிஜனை நன்கு சுவாசிக்க முடியும்.
காதை பிடித்தல் :
இரு கைகளாலும் காதுகளை பிடிப்பதால் காதுகள் மூலம் மூளைக்கு செல்லும் அனைத்து நரம்புகள் நல்ல வளர்ச்சி மற்றும் உணர்ச்சி பெற்று மூளையை தூண்டும்.
இனி தினமும் காலை தோப்புக்கரணம் செய்யுங்கள் மூளையை வைத்து நினைவாற்றலை அதிகரித்து சுறு சுறுப்புடன் செயல் படுங்கள்.