பார்ப்பதற்கே அழகை தரும் என நம்ப வைக்கும் பீட்ருட்!

பீட்ருட்டை பச்சையாக சாப்பிட்டாலே நாம் அழகை பெறலாம். அதன் சிறு துண்டை எடுத்து உதடுகளில் தினமும் தடவி வர விரைவில் உதடு சிவப்பழகை பெறுவதை காணலாம்.
முகத்தில் பீட்ருட் சாற்றை பயன்படுத்த முகம் நல்ல சிவப்பு அழகை பெற்று அழகான, பள பளப்பான தோற்றத்தை கொடுக்கும் .
இதனுடன் கடலை மாவை சேர்த்து பேஸ்ட் போல் தயாரித்து கொண்டு அதை தினமும் முகத்தில் பூசி வர முகம் பிரகாசமாக மாறுவதை நீங்களே பார்க்கலாம்.
தயிரை பீட்ருட் சாற்றுடன் சேர்த்து நன்கு கலக்கிய பின் முகத்தில் பயன்படுத்த, முகத்தில் உள்ள கெட்ட நாசினிகள் அழிந்து புதிய செல்கள் உற்பத்தி ஆகும். இறந்த செல்கள் அகற்ற பட்டு புதிய செல்கள் உருவாகும்.
இதன் சாற்றுடன் தேங்காய் எண்ணெய் அல்லது பாதம் சேர்த்து நன்கு கலக்கி அதை கண்களில் மேலும் கீழும் சுற்றி பூசி விட்டு காய்ந்த பிறகு நீரில் கழுவி வர கண்கள் புத்துணர்ச்சி பெரும், கருவளையங்கள் வராது, கண்களை அழகாக காட்டும்.