முகத்தை அழகு படுத்த பயன்படும் கிரீம்களை நன்கு தெரிந்து பயன்படுத்துங்கள்!

பெண்கள் தங்களை அழகு படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கிடைக்கும் கிரீம்களை எல்லாம்ப யன்படுத்துகிறார்கள். இது முற்றிலும் தவறான விஷயம். அவர் அவர்களின் சருமத்தை பொறுத்தே கிரீம் மற்றும் பேஸ் வாஷ், சோப்பு போன்றவைகளை பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் சருமத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
முகத்தில் உருவாகும் கோளாறுகள் :
நம் சருமத்திற்கு ஏற்ற பொருட்களையே பயன்படுத்த வேண்டும். மருத்துவரின் ஆலோசனையை கேட்டே உபயோகப்படுத்தலாம். பருக்கள், ரத்தம் கட்டுதல், வீக்கங்கள் போன்றவைகள் வர கூடும்.
முகத்தில் ஏற்படும் சிவப்பு நிற திட்டுகளுக்கு காரணம் நீங்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் பேஸ் வாஸ்கள் தான்.
உங்கள் சருமம் மிருதுவான தன்மையில் இருந்து மாறி வறட்சியான நிலையில் காண பட்டால் அதற்கு காரணம் நீங்கள் உபயோகிக்கும் வேதி பொருட்களாலான பொருட்களே. வெயிலில் சென்று வந்த பிறகு முகத்திற்கு பயன்படுத்தும் பேஸ் வாஷ் போன்றவைகள் ஒத்துக்கொள்ளாமல் போனால் சருமத்தில் பல பாதிப்புகளை காணலாம்.
அதிக கிளிசரின் மற்றும் சல்பேட் இருக்கும் வேதி பொருட்களை தவிர்த்து இயற்கை முறையில் உருவாகும் பொருட்களை உபயோகிக்க உங்கள் சருமத்திற்கு நல்லது. திடீர் என்று முகத்தில் உருவாகும் எண்ணெய் கசடுகள், அரிப்புகள், படர்தாமரை போன்றவைகளுக்கு காரணம் நாம் உபயோகிக்கும் சோப்பு.