அழகான ரோஜாவின் மருத்துவம்!!

வீட்டிற்கு அழகு சேர்ப்பதோடு உடலுக்கும் ஆரோக்கியத்தை கொடுக்கிறது ரோஜா. இதன் இதழ்களை சாப்பிடுவதன் மூலம் மேனி பள பளப்பாகும் மற்றும் உதடுகளில் தடவ உதடு நல்ல சிவப்பழகை பெறும். தினம் ஒரு இதழ் சாப்பிட சீத பேதி வராமல் தடுக்கலாம்.
கரோட்டின், சர்க்கரை அதிகம் அடங்கி உள்ளது. பெண்களின் அழகிற்கு முக்கிய பங்கு வகிக்கும் ரோஜா நல்ல முக பொலிவை கொடுக்கும். இதன் மூல கிடைக்கும் ரோஸ் வாட்டரையும் பயன்படுத்தலாம். வாசனை பொருட்களிலும் ரோஜா இன்றியமையாது பயன்படுகிறது. அனைத்து விழாக்களிலும் நல்லதொரு நறுமண பொருளாக பயன்படுகிறது.
இதழ்களை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை ரோஜா இதழ்களை சாப்பிட வயிற்று வலிகள் தீரும்.
ரத்த விருத்தி அடைய ரோஜா இதழ்களை அரைத்து அதனுடன் சர்க்கரை பாகுவை கலந்து சாப்பிட வேண்டும். சூரியனின் வெப்பத்தினால் உடலில் ஈர்க்கப்படும் அதிகப்படியான சூட்டினால் ஏற்படும் வயிற்று தொடர்பான கோளாறுகளுக்கு ரோஜா இதழ்கள் மிகவும் பயனுள்ளது.