பார்ப்பதற்கு அழகான நிறத்தை கொண்ட கேரட்டின் மருத்துவம்?

கேரட்டில் இருக்கும் நிறமிகள் அழகு சேர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. முகத்தில் பருக்கள், அழுக்குகள் சேருவதை தடுத்து முகத்தை பளிச்சென்று வைத்து கொள்ள உதவுகிறது.
கேரட்டை வாயில் இட்டு நன்கு அரைத்து சாப்பிடுவதன் மூலம் வாயில் உமிழ்நீர் அதிகமாக சுரக்கும்.
உணவுகளை விரைவில் செரிக்கும் திறன் கேரட்டிருக்கு அதிகமே இருக்கிறது.
அதிகமா கேரட்டை உண்பதினால் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரித்து ரத்தத்தை சுத்திகரிக்கும் திறன் கொண்டது, இதை பச்சையாக திண்பதே நல்லது.
கேரட்டை துருவி அதனை ஜூஸ் போட்டு குடிப்பதன் மூலம் முகத்தில் எவ்வித சுருக்கங்களும் வராமல் பாதுகாத்து கொள்கிறது.
கேரட்டை துண்டுகளாக நறுக்கி சாப்பிட பற்களுக்கு உறுதியை கொடுக்கும், வாயில் துர்நாற்றம் ஏற்படாமல் தடுக்கும்.
உடல் சூட்டை தணிக்க வேண்டும் என்றால் கேரட் ஜூஸ் சாப்பிடுங்கள். உதடுகள் கருமை நிறத்தை இழந்து சிவந்த நிறம் பெற கேரட்டை இரண்டாக வெட்டி அதன் துண்டுகளை உதட்டில் தடவி வர அழகான உதடுகளை பெறலாம்