வாழை இலை சரும அழகுக்கு பயன்படுத்தும் முறை:-
Sep 11, 2017, 15:00 IST

வாழையின் அனைத்து பகுதியும் நமக்கு பயனளிக்கிறது என நாம் முன்னரே பார்த்து இருப்போம். வாழைப்பழம் உடலின் உட்பகுதியில் பல நன்மைகளை அழிக்கிறது. அதே போல வாழை இலை உடலின் வெளிப்புற பகுதிகளில் ஏற்படும் காயங்கள் மற்றும் சரும பிரச்சனையை சரி செய்ய பயன்படுகிறது.
வாழை இலையின் நன்மைகள்:-
- அழகை கெடுக்க கூடியவையான சரும வெடிப்பு, பொடுகு தொல்லை, சொறி, சிரங்கு, தீக்காயம் போன்றவற்றை சரி செய்ய புதிதாக பறிக்கப்பட்ட இலையிலிருந்து கிடைக்கும் ஜூஸை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் மேற்கண்ட பிரச்சனைகள் சரியாகி விடும்.
- வாழை இலையில் பல மருத்துவ குணம் நிறைந்திருப்பதால் விஷக்கடி, பூச்சிக்கடி, சரும அரிப்பு போன்றவை சரியாகும். இவை உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.
- அழகு சாதன கிரீம்களில் உள்ள அலண்டாயின் எனும் பொருள் வாழை இலையிலிருந்து தான் பெறப்படுகிறது. இவை சருமத்தில் புதிய செல்கள் வளர வழிவகுக்கிறது.
- அழகான மற்றும் மென்மையான சருமத்தை பெற வேண்டுமெனில் ஐஸ் கட்டிகளை வாழை இலையில் வைத்து மசாஜ் செய்தால் போதும் மிருதுவான மற்றும் அழகான சருமத்தை பெற முடியும்.