வாழைப்பூ அழகு தெரியும் நன்மை தெரியுமா???

பார்ப்பதற்கு அழகான மற்றும் பூக்களில் பெரியதாய் காணப்படும் பூ தான் வாழைப்பூ.
நன்மைகள்:
அதிகமான இருமல் சளி தொல்லை இருப்பவர்கள் வாழைப்பூவை அவித்து குழம்பு வைத்து சாப்பிட விரைவில் குணம் அடையும். வயிற்று வலி, கை, கால் வலிகள் அவதி படுவோர்களுக்கு வாழைப்பூவினை பொடியாக இடித்து எண்ணெயுடன் கலந்து தேய்த்து வர வலி மட்டுமல்லாமல் அலற்சி அனைத்தும் நீங்கும்.
அதிமான உடல் சூட்டினால் கஷ்டமா! வாழைப்பூவை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சமைத்து சாப்பிட நல்ல பலனை கொடுக்கும். இந்த பூ சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்ல ஒரு அருமருந்து. கணையத்தை பராமரித்து இன்சுலினை சுரக்க செய்து நம்மை பாதுகாக்கும். இதனை குழம்பு வைத்து சாப்பிட அதில் இருக்கும் சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
உணவுகள் செரிக்காமல் வயிற்றில் கோளாறுகள் ஏற்பட்டால் அதனை தீர்க்க வாழை பூவை சீரகத்துடன் சேர்த்து அருந்த வயிற்று கடுப்பு, எரிச்சல் அனைத்தும் நீங்கும்.