தொப்பையை குறைக்க உதவும் ஆயுர்வேத முறை!

தொப்பையை குறைக்க உதவும் ஆயுர்வேத முறை!

மாறிவரும் தொழில் நுட்பத்தால் உடல் உழைப்பு குறைந்து இருந்த இடத்திலேயே வேலை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சாப்பிட்ட பின்னர் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பதால் உடலில் கொழுப்பு அதிகமாக சேகரிக்கப்பட்டு தொப்பை உருவாகிறது. தொப்பையை குறைக்க பல்வேறு உடற்பயிற்சி செய்தும் பயனளிக்கவில்லையா? அப்படி என்றால் ஆயுர்வேத முறையை ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள். நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

தொப்பையை குறைக்க உதவும் ஆயுர்வேத முறை:-

  • தினமும் காலையில் எழுந்ததும் சிறிது கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால் தொப்பை வேகமாக குறையும். இதற்கு காரணம் கறிவேப்பிலை உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவது தான்.
  • ஆளி விதையை தினமும் சாலட்டில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் பிரச்சனை சரியாகும். இதில் உள்ள ஒமேகா – 3 பேட்டிக் அமிலம் கொழுப்புகளை வேகமாக குறைக்கிறது.
  • தினமும் இரவில் சோம்பை நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த நீரை குடித்தால் இரத்தம் சுத்தமாகும். கொழுப்புகள் குறையும். உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும். இதனால் தொப்பை எளிதில் குறையும்.
  • நீர்ச் சத்து நிறைந்த பழங்கள் மற்றும் அதிக அளவிலான நீர் குடிப்பதால் உடலின் எடையை கட்டுக்குள் வைக்கலாம். மேலும் தொப்பை எளிதாக குறையும்.
  • வெந்தயத்தினை நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் கிடைக்கும் நீரை இதமாக சூடேற்றி குடித்து வந்தால் இதில் உள்ள நார்ச்சத்து தொப்பையை எளிதாக குறைக்கும்.
  • திரிபலா எனப்படும் மூலிகை பொருள் உடலை சுத்தம் செய்து உடலை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. திரிபலா பொடியை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின்னர் தேன் கலந்து குடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறைவதோடு தொப்பையும் குறையும்.

Share this story