தலை வலிக்கு அடிக்கடி எடுத்து கொள்ளும் மாத்திரைகளை தவிர்க்க வேண்டும் !

மாத்திரைகளை அதிகம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் இல்லையென்றால் விளைவுகளை சந்திக்க வேண்டும்!
சிலர் தங்களுக்கு அடிக்கடி ஏற்படும் தலை வலி மற்றும் உடல் வலிகளுக்கு அதிக மாத்திரைகளை உண்ணும் பழக்கத்தை கொண்டு உள்ளார்கள். இதனால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தெரிவதில்லை
ஆஸ்பிரின் மாத்திரைகள் அளவான முறையிலேயே உட்கொள்ள வேண்டும். அதிகமாக உட்கொண்டால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும்.
மாத்திரைகளில் இருக்கும் ஆபத்துகள் :
வயிற்று கோளாறுகளுக்கு கொடுக்கும் மாத்திரைகளில் ஆஸ்பிரின் மாத்திரிகளையும் சேர்த்து கொடுக்கிறார்கள். இதனை உட்கொள்வதால் ரத்த கசிவுகள் ஏற்பட்டு உயிர்க்கு ஆபத்தாக முடியும்.
ஆஸ்பிரின் மாத்திரைகளை அதிகம் எடுத்து கொள்வதால் இதய நோய்கள் ஏற்பட்டு ரத்த கசிவையும் உண்டாக்கும், இது உயிரை பறிக்கும் அபாயத்தை கொண்டு உள்ளது.
பக்கவாதம் வருவதற்கும் காரணமாக அமைவதும் இந்த ஆஸ்பிரின் மாத்திரைகளை அதிகம் விழுங்குவதே.
வயது முதிர்ந்தவர்கள் மருத்துவரை ஆலோசிக்க விருப்பம் இல்லாமல் கடைகளில் விற்பனை ஆகும் ஆஸ்பிரின் போன்ற மருந்து, மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகிறார்கள். இதனை அவர்களுக்கு எளிதில் உடலில் உபாதைகளை ஏற்படுத்தும். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு திறன் குறைவாகவே காண படும், இதனால் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகுகிறார்கள்.
ஆஸ்பிரின் மாத்திரைகளை அளவான முறையில் எடுத்து கொண்டால் ரத்த நாளங்களில் ஏற்படும் குறைபாடுகளையும் மற்றும் இதய கோளாறுகளையும் போக்கவும் பயன் உள்ளதே. ரத்தத்தில் உறைதல் நிலையை கட்டுப்படுத்தவும் உதவும்.
இந்த மாத்திரைகளை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் போலவே அதன் பக்க விளைவுகளும் இருக்கின்றன. ஆகையால் எப்பொழுதும் மருத்துவரின் ஆலோசனை கேட்டு தெரிந்து கொண்டு அதன்படி நடந்து கொள்வதே மிகவும் நல்லது.