Tamil Wealth

அவரைக்காயில் உள்ள சத்துகள் குறித்து பார்க்கலாம் வாங்க!!

அவரைக்காயில் உள்ள சத்துகள் குறித்து பார்க்கலாம் வாங்க!!

அவரைக்காயில் உள்ள சத்துகள் குறித்து நாம் இப்போது பார்க்கலாம். அதாவது ஒபேசிட்டி பிரச்சினை உள்ள பலருக்கும் அவரைக்காயானது பரிந்துரைக்கப்படுகின்றது. அதற்குக் காரணம் அதில் உள்ள நார்ச் சத்துகளே ஆகும். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கச் செய்கிறது.

அவரைக்காய் அதிக அளவில் புரதச்சத்துகளைக் கொண்டதாகவும் உள்ளது, இதனால் தலைமுடி உதிர்தல் போன்ற பிரச்சினைகளுக்கும் இது சிறந்த தீர்வாக உள்ளது. மேலும் அவரைக் காயில் நல்ல கொழுப்பு, கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்றவைகள் உள்ளன.

மேலும் அவரைக்காய் உயர் இரத்த அழுத்தம், உயர் சர்க்கரை போன்ற பிரச்சினைகளுக்கு மிகச் சிறந்த தீர்வாக இருந்து வருகின்றது, மேலும் அவரைக்காயினை குழம்பாக வைத்து சாப்பிடுவதைவிட பொரியலாக சாப்ப்பிடுவடு மிகச் சிறந்த செரிமான சக்தியினைக் கூட்டுவதாக உள்ளது.

 மேலும் அவரைக்காய் பித்தத்தினைக் குறைக்கும் தன்மை கொண்டுள்ளது,  நீரிழிவு நோய் உள்ளவர்கள் வாரத்தில் 2 முறை அவரைக்காய் எடுத்துக் கொள்வது நல்லது. ஆனால் அவரைக் காயில் வாயு உள்ளதால் குழந்தைகளுக்கு குறைந்த அளவில் கொடுத்தல் நல்லது. மேலும் இது சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் இது சரி செய்கிறது.

Share this story