கருவாடு சாப்பிடுபவரா நீங்கள்? அப்படின்னா இதை கண்டிப்பா பாருங்க!!
Thu, 14 Sep 2017

ஒரு சிலருக்கு கருவாடு வாசனையே பிடிக்காது. ஆனால் நம்மில் பலரும் கருவாடு சமைத்த பிறகு அதை ஒரு கை பார்க்காமல் விட மாட்டோம். அசைவ உணவுகளில் கருவாட்டில் தான் கொழுப்பு சத்து மிகவும் குறைவு. கருவாடு எல்லோரும் சாப்பிடக் கூடிய உணவல்ல. ஒரு சிலர் அதை தவிர்க்க வேண்டும். மேலும் இதை சாப்பிடும் போது சில உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் தீமை ஏற்படும். அதை பற்றி இப்போது பார்க்கலாம்.
கருவாடு சாப்பிடுபவர்கள் கவனத்திற்கு:-
- கருவாடை உணவாக சாப்பிடும் போது தயிர், கீரை போன்ற உணவுகளை சேர்த்து கொள்ள கூடாது. அப்படி செய்தால் உணவில் விஷத்தன்மை ஏற்படும்.
- தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது மீன், நண்டு, இறால் போன்ற உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
- இரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் கருவாடு அதிகம் சாப்பிடக் கூடாது. ஏனெனில் இதில் அதிக அளவில் உப்பு சேர்ந்து இருக்கும்.
- கருவாடு, மீன், நண்டு போன்ற உணவை சாப்பிடும் போது தயிரை உணவில் சேர்த்தால் வெண்மேகம் போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.