நீர் சதையால் பாதிக்கப்பட்டவர்களா? பருமனை அதிகரிக்கும்!

சிலருக்கு அதிக உடல் எடைக்கு காரணம் நீர் சதை தான். அதனை ஊழை சதை என்றும் கூறுவார்கள். இது வருவதற்கு காரணம் தெரிந்து கொள்ளுங்கள், அதனை தவிர்த்து கொள்ளுங்கள்.
புரத குறைபாடு :
சிறு வயதிலே போதுமான புரத சத்து உணவுகளை எடுத்து கொள்ளாமல் இருந்தால் உணவில் நீர் சேர்ந்து உடல் எடை அதிகரிக்கும். கார்ப்ஸ் உணவுகளை தவிர்க்க வேண்டும், ஆனால் அதனையே அதிகம் எடுத்து கொண்டால் விரைவில் உடல் எடையை அதிகரித்து, அதனால் உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.
சோடியம் இருக்கும் உணவுகள் :
பாலீதின் பைகளில் இருக்கும் உணவுகளை அதிகம் உட்கொண்டால் அதில் இருக்கும் சோடியம், வாட்டர் ரிடேன்சன் உடலில் அதிகரிக்கும், இதனால் உடல் பருமன் அதிகரித்து கொண்டே செல்லும். அதற்குமேல் எண்ணெயில் பொரித்த உணவுகள், அதிக கொலஸ்ட்ரால் இருக்கும் உணவுகளை எடுத்து கொண்டால் தொப்பை உருவாகும் மற்றும் கொழு கொழுவென்று ஆகி விடுவோம்.
மாத்திரைகள் :
அலற்சியை ஏற்படுத்தும் மாத்திரைகளை அதிகம் சாப்பிட்டால் அது உடலில் கெட்ட நீர்களை சேர்த்து விடும். உடலில் வீக்கங்களை ஏற்படுத்தி அதில் நீரினை சேர்க்கும் அபாயம் இருக்கிறது. ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகளை அதிகம் விழுங்க கூடாது.
அதிக நீர் :
நீரினால் உடலில் ஏற்படும் பருமன் இதயத்தில் பல கோளாறுகளை ஏற்படுத்தும், இது மாரடைப்பு, ரத்த ஓட்டத்தை பாதிக்கும் மற்றும் ஹார்மோன்களின் வளர்ச்சியை பாதித்து உடலில் நீரை சேர்க்கிறது.
உடற்பயிற்சி :
நீர் சதையால் ஏற்பட்ட உடல் பருமனை குறைக்க சிறந்த முறை உடற்பயிற்சிதான் நல்லது. படி படியாக உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். தினமும் காலை 15 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள், முதலில் உடலில் வலிகள் உருவாகும், போக போகத்தான் சரி ஆகும். பின் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற உடற்பயிற்சிகளை செய்ய ஆரம்பியுங்கள்.