பல் வலியால் அவஸ்தையா? வழிமுறைகள் பற்றி பார்க்கலாமா?

பற்களில் ஏற்படும் அனைத்து கோளாறுகளால் உணவு விழுங்குவது மற்றும் குடல், வயிற்றில் பிரச்சனைகள் வர கூடும்.
வாயில் ஏற்படும் புண்கள் மற்றும் வாயின் துர்நாற்றத்தை போக்க, பற்களில் உண்டாகும் வலி, வயிற்றில் ஏற்படும் எரிச்சல் போன்றவற்றை நீக்க வெள்ளை பூண்டுடன் மணத்தக்காளி கீரையை அரைத்து பயன்படுத்த நல்ல பலனை கொடுக்கும்.
சிலருக்கு பற்களில் உறுதி தன்மை குறைவாக இருந்தால் அடிக்கடி பற்களில் ஏதேனும் குறைபாடு வந்து கொண்டே இருக்கும் அதுமட்டுமல்லாமல் பற்கள் விழும் அறிகுறிகள் காண படும். இதனை சரி செய்யும் விதமாக கால்சியம் அதிகம் இருக்கும் உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும் மற்றும் கீரை வகைகளை அதிகம் உட்கொள்ள ஈறுகளில் ஏற்படும் ரத்த கசிவினை போக்கும் மற்றும் ஈறுகளுக்கும் நல்ல பலம் கொடுக்கும்.
வெந்தயம் :
வெந்தயத்தை கொண்டு பற்களில் ஏற்படும் கூச்சம் இருக்கும் இடங்களில் அல்லது வாயில் இட்டு கொப்பளிக்க நாளடைவில் குணம் ஆகும்.
வெந்தயத்தை நீரில் கொதிக்க வந்து நீரினை வடிகட்டி வாயில் சிறிது நேரம் வைத்து பின் அதனை கொப்பளிக்க வாய் துர்நாற்றம், பற்களுக்கு உறுதியை கொடுக்கும், உணவுகள் பற்களில் ஒட்டிக்கொண்டு உண்டாகும் தொற்றுகளும் நீங்கும்.