குட்டையா இருக்கீங்களா? சீக்கிரம் வளரணுமா? இதை படிங்க!

சிலருக்கு உடல் வளர்ச்சி மிகவும் குறைவாகவே காண படும். இதனால் அவர்களுக்கு உடல் வளர்ச்சியில் மாற்றங்கள் உருவாகும், வளர்ச்சிக்கு உகந்த உணவுகளை கட்டாயம் உண்ண வேண்டும். அதுவே நமது உடல் வளர்ச்சிக்கும் மற்றும் மூளையின் செயல் திறனுக்கும், உடலில் உட்புற உறுப்புகளை பாதுகாக்கும்.
ஊட்ட சத்துக்கள் :
பாலில் இருக்கும் சத்துக்கள் நமது உடல் வளர்ச்சிக்கு பயன்படுகிறது. நமது வளர்ச்சிக்கு தேவையான புரோட்டின் மினரல், விட்டமின்கள், கார்போஹைட்ரைட்டுகள் போன்றவை அடங்கி இருக்கும் உணவுகளையே எடுத்து கொள்ளுங்கள் மற்றும் அளவான உணவுகளை சாப்பிடுவதே நல்லது, உடல் பருமனை அதிகரிக்கும் கொழுப்புகள் அதிகம் இருக்கும் உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து, வளர்ச்சிக்கு ஏற்ற உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள்.
உங்கள் செயல்களில் இருக்கிறது ?
நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் இருக்கிறது உங்களது வளர்ச்சி. நாற்காலியில் அமரும் பொழுது கூட நன்கு நிமிர்ந்து உட்காருங்கள், வளைந்து கொண்டு உட்கார கூடாது, நடந்து செல்லும் பொழுது நேராக நிமிர்ந்து செல்ல வேண்டும், இவைகளை தவிர்த்தால் வளர்ச்சி குன்றும்.
சரியான வேளையில் உணவு :
சிலர் நேரத்திற்கு சாப்பிட மாட்டார்கள் மற்றும் ஒரு நாளைக்கு மூன்று வேளை கட்டாயம் உண்ண வேண்டும், எதனையும் கடைபிடிக்க மாட்டார்கள். மிக முக்கியமானது காலை உணவு, இதைத்தான் அனைவரும் தவிர்க்கிறார்கள். இது மிகவும் தவறானது, காலை உணவுதான் உடல் வளர்ச்சிக்கு முக்கியமே. வளரவில்லை என்று கவலை படுகிறீர்கள் என்றால் அதற்கு காரணம் உங்கள் உணவில் நீங்கள் சரியாக இருக்க வேண்டும்.
அமைதியான தூக்கம் :
ஒருவருக்கு கண்டிப்பாக தினமும் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். இதனை கடைபிடிக்க வில்லை என்றால் உங்கள் வளர்ச்சியில் குறைபாடுகள் வர கூடும். இரவு நல்ல ஆழ்ந்த தூக்கம், எவ்வித சத்தமும், இடையூறுகளும் இல்லாமல் தூங்க வேண்டும்.