உடல் பருமனை குறைக்கும் கவலை நீங்கவில்லையா?

அதிகமான உணவுகள் உட்கொள்வது அல்லது ஒழுங்கான உடற்பயிற்சி இன்றி இருப்பது, எண்ணெய் பலகாரங்கள் மற்றும் அதிக இனிப்பு சுவை கொண்டவைகளை அதிகம் சாப்பிட உடல் பருமன் அதிகரிக்கும். உணவு கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் உடல் எடை குறையவில்லை என்று நினைத்தால் நீங்க சில தவறுகளை செய்கிறீர்கள் என்று அர்த்தம்.
தவறுகள் :
1.காலை எழும்புவது :
காலை துயில் எழுத்து மிக அவசியம், உணவுகள் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் காலையில் சீக்கிரம் எழ வேண்டும். காலை வெயில் உடலில் பட்டால்தான் ஆரோக்கியமே.
2.நல்ல உறக்கம் :
தூக்கத்தில் கட்டுப்பாடு வேண்டும் தினம் 7 அல்லது 8 மணி நேரம் தூக்கம் போதுமானது.
3.கொழுப்பு உணவுகள் :
அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ண கூடாது. உடற்பயிற்சி செய்து இனிப்பு உணவுகளை அல்லது இதர உணவுகளை எடுத்து கொண்டால் எந்த பயனும் இல்லை.
4.உணவு பழக்க வழக்கம் :
காலை உணவு கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும். உடல் பருமன் குறைய வேண்டும் என்று நினைத்தால் மதிய உணவுக்கு சாதத்தை தவிர்த்து பழங்கள் எடுத்து கொள்ளலாம், இரவு உணவாக சப்பாத்தி அல்லது இட்லி, தோசை போன்றவற்றை சாப்பிடுங்கள்.