அன்னாசிப் பழத்தின் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
Sep 8, 2017, 21:00 IST

அன்னாசிப் பழத்தின் நன்மைகளை நாம் சொல்லிக் கொண்டே போகலாம். இதன் விலையோ குறைவு தான் என்றாலும் நன்மைகள் ஏராளம். அன்னாசி பழத்திலிருந்து தயாரிக்கப்படும் ஜூஸை குடிக்க விரும்பாதவர்கள் யாரும் இல்லை. அன்னாசிப் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.
அன்னாசிப் பழத்தின் நன்மைகள்:-
- அன்னாசிப் பழத்தில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் இரத்த அழுத்தம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது. இதயத்தின் செயல்பாட்டை அதிகரிப்பது மட்டுமில்லாமல் மாரடைப்பு மற்றும் பக்க வாதம் ஏற்படாமல் பார்த்து கொள்ள முடியும்.
- அன்னாசிப் பழச்சாறில் அதிகப்படியான வைட்டமின் – சி உள்ளது. இது இயற்கையாகவே உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
- வேலைப் பளுவால் ஏற்படும் அதிகப்படியான மன அழுத்தத்தை குறைக்க இது உதவுகிறது. மேலும் இதில் உள்ள என்சைம் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும். மேலும் சைனஸ் பிரச்சனையையும் சரி செய்கிறது
- அதிக அளவிலான வைட்டமின் எலும்பு பிரச்சனையை சரி செய்கிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் புற்று நோய் செல்களை எதிர்த்து போராடுகிறது.