திராட்சைப் பழத்தை அடிக்கடி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?
Fri, 8 Sep 2017

திராட்சைப் பழம் எல்லா இடங்களிலும் பரவலாக கிடைக்க கூடிய ஒரு பழ வகை தான். இதில் பல வகையான வண்ணங்கள் உள்ளன. முக்கியமாக சொன்னால் கருப்பு, பச்சை ஆகிய இரண்டும் சாதரணமாக கிடைக்க கூடிய ஒன்று. மேலும் சிவப்பு, ஊதா, ப்ரவுன் போன்ற நிறத்திலும் இவை கிடைக்கிறது. மது தயாரிக்க இதை பயன்படுத்திய பின்னரே இது அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டது. இதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.
திராட்சை பழத்தின் நன்மைகள்:-
- திராட்சையில் உள்ள அதிக அளவிலான ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமில்லாமல் புற்று நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
- திராட்சையை தோலுடன் சாப்பிட்டால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் இரத்த அழுத்தம் ஏற்படாமல் பாதுகாத்து கொள்ள முடியும்.
- இதில் உள்ள பாலிபினால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை மறைப்பதோடு முதிர்வு தன்மையை குறைக்கிறது. மேலும் முகப்பருக்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களுடன் போராடி பருக்கள் ஏற்படாமல் பாதுகாத்து கொள்ள முடியும்.
- திராட்சையில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவு சோடியம் இரத்த அழுத்தம் ஏற்படாமல் பாதுகாப்பது மட்டுமில்லாமல் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
- தினமும் இதை சாப்பிடுவதால் கண்ணில் உள்ள ரெட்டினாவில் அழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கலாம். மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க இது உதவுகிறது,
- உடலில் ஆங்காங்கே ஏற்படும் மூட்டு வலி மற்றும் வீக்கங்களை குறைக்க இது உதவுகிறது. வயதானால் ஏற்படும் மூட்டு வலியை சரி செய்ய இதை தினமும் சாப்பிட்டாலே போதுமானது.