பெருங்காயத்தின் நன்மைகள் பற்றி தெரியுமா?

பெருங்காயத்தின் நன்மைகள் பற்றி தெரியுமா?

பெருங்காயம் நாம் சாப்பிடுகிற அனைத்து காரமான உணவுகளிலும்  சேர்க்கப்பட்டு இருப்பதை நாம் அறிந்திருப்போம். இது பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தக் கூடிய உணவு பொருளாகும். இது ஒரு குறிப்பிட்ட தாவரத்தின் செடி மற்றும் தண்டு பகுதிகளிலிருந்து பெறப்படும் பசையை காய வைப்பதன் மூலமே கிடைக்கிறது. நாம் பெரும்பாலும் கடைகளில் வாங்க கூடிய பெருங்காயத்தில் 25% மட்டுமே உண்மையான பெருங்காயம் உள்ளது. மீதி உள்ள 75% அரிசி மாவு மற்றும் பிற பசைகளை சேர்த்து கிடைப்பது தான். உணவில் சேர்ப்பதால் உணவின் வாசனை அதிகரிக்கும். இதை தடுக்க கட்டியாக கிடைக்கும் பெருங்காயத்தை வாங்கி வீட்டிலேயே பொடியாக்கி பயன்படுத்தி கொள்ளலாம். பெருங்காயத்தின் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

பெருங்காயத்தின் நன்மைகள்:-

  • காற்று மற்றும் நீரினால் ஏற்படும் வாதம் மற்றும் கபம் போன்றவற்றை சரி செய்ய பெருங்காயம் ஆயுர்வேதத்தில் பயன்படுகிறது.
  • மழைக் காலங்களில் வயிற்றில் உருவாகும் விஷ கிருமிகளை அழித்து வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் வாயுக் கோளாறுகளை சரி செய்ய பெருங்காயத்தை பயன்படுத்தினால் போதும்.
  • வெந்நீரில் பெருங்காயத்தை சிறிதளவு சேர்த்து குடித்து வந்தால் ஜீரண சக்தியை அதிகப்படுத்துவதோடு, புற்று நோய் வராமலும் தடுக்கலாம்.
  • பெருங்காயத்தை ஆஸ்துமா, ஜலதோஷம் மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுத்தலாம்.
  • மழைக் காலத்தில் பரவக் கூடிய ஸ்வைன் ப்ளூ காய்ச்சலை குணப்படுத்த பெருங்காயம் பயன்படுகிறது.

Share this story