Tamil Wealth

உங்களுக்கு அதிகம் கோபம் வருகிறதா?

உங்களுக்கு அதிகம் கோபம் வருகிறதா?

அதிகமான கோபம் உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும் தெரியுமா. உங்களின் அதிக கோபத்தினால் முதலில் பாதிக்கப்படுவது உங்கள் மூளை தான். மூளையின் நரம்புகள் பாதிக்கப்பட்டு ரத்தத்தின் அழுத்தம் அதிகரித்து ரத்த குழாய்கள் வெடிக்கும் அபாயம் ஏற்படும்.

பாதிப்புகள்:

கோபத்தினால் ஏற்படும் மன அழுத்தத்தினால் இதயம் பாதிப்படைந்து மூச்சு திணறல் ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
தலையில் இருக்கும் நரம்புகள் பாதிக்க பட்டு பெரிய தலை வலியை ஏற்படுத்தும். அந்த தலை வலியால் மூளைதான் அதிக பாதிப்பு உள்ளாகும்.

அதிக கோபத்தின் போது நமக்கு சுவாசத்தில் சிக்கல் உண்டாகும் அதிக மூச்சு வாங்கும் நிலைமை உருவாகும். கோபத்தை அதிகப்படுத்தி கொண்டே இருந்தால் அந்த மூச்சு வாங்குதல் மூச்சு அடைப்பாக மாறி உங்கள் உயிருக்கே பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

இரவில் தூக்கம் வராத நிலைக்கு கொண்டு வரும் உங்கள் கோபம். இதனால் இரவு வேளையில் தூங்கிய பின் உடலில் சுரக்கும் சுரப்பிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு உடலுக்கு கேடு விளைவிக்கும்.

Share this story