Tamil Wealth

எப்பொழுதும் நகம் கடிக்கும் பழக்கம் கொண்டவர்களா நீங்கள் ?

எப்பொழுதும் நகம் கடிக்கும் பழக்கம் கொண்டவர்களா நீங்கள் ?

நகம் கடிக்கும் பழக்கம் குழந்தைகளுக்கும் இருக்கிறது. அவர்கள் அந்த பழக்கத்தை கைவிட நீங்கள் செய்ய வேண்டிய முறைகள். இந்த பழக்கம் தீங்கானது,

குழந்தைகளுக்கு அது பழக்கமாகி விட்டால் அதனால் உடல் நல கோளாறுகள் ஏற்படும், இதனை சிறு வயதிலே கட்டுப்படுத்துங்கள்.

புரிந்துகொள்ள வைக்க வேண்டும் :

குழந்தைகள் நகம் கடிப்பதை கண்டிக்காமல் அன்பாக சொல்லுங்கள், நகம் கடிப்பதனால் ஏற்படும் தீமைகள், உடல் நல கோளாறுகளை எடுத்து கூறினால் அவர்கள் நகம் கடிக்கும் பழக்கத்தை கைவிடுவார்கள். முதலிலே அதிக கோபத்துடனோ அல்லது எரிச்சலுடனோ, அடிக்கவோ கூடாது பொறுமையுடன் சொல்லுங்கள்.

நகம் கடிக்காமல் இருக்கும் குழந்தைகளின் உடல் நலனை எடுத்து கூறி. பழக்கத்தை கைவிட கூறுங்கள்.

பெற்றோர்கள் நகத்தை வெட்டாமல் விட்டால் அவர்கள் விளையாடும் பொழுது நகங்களின் இடுக்குகளில் சேரும் அழுக்குகள், கிருமிகள் வயிற்றில் சென்று வயிற்று வலி, வாந்தி, ஒவ்வாமை போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.

விரல்களில் வேப்பிலை சாறு, பாகற்காய் சாறு போன்றவைகளை பயன்படுத்த கசப்பு தன்மையால் கைகளை வாய்க்கு கொண்டு போக மாட்டார்கள்.

குழந்தைகளின் கை மற்றும் கால்களில் இருக்கும் நகங்களை அடிக்கடி வெட்ட வேண்டும். இதனை நமக்கு மட்டும் பாதிப்புகள் அல்ல, மற்றவர்களுக்கும் நகத்தின் மூலம் ஏற்படும் காயங்கள் பாதிப்பை உண்டு பண்ணும். நகத்திலும் விஷ தன்மை இருப்பதால் அதனால் ஏற்படும் காயங்கள் சில விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் அடிக்கடி நகங்களை வெட்டுங்கள். உடல் நலனை பேணுங்கள்.

நகம் கடிக்க முக்கிய காரணமே :

  1. பெற்றோர்கள் அடிக்கடி குழந்தைகளின் நகத்தை வெட்ட தவறுவது
  2. பள்ளிகளில் சக மாணவர்களின் பழக்கத்தினால்
  3. குழந்தைகளின் தனிமை
  4. கவலையுடன் காண படும் பொழுது
  5. அதிக மன அழுத்தம் மற்றும் கை சூப்புதல்
  6. சில செயல்களை செய்ய முடியாமல் கடின படும் பொழுது
  7. ஆழ்ந்த யோசனை

Share this story