Tamil Wealth

பருக்களை மறைய செய்ய உதவும் காப்பியின் அற்புத பயன்கள்!

பருக்களை மறைய செய்ய உதவும் காப்பியின் அற்புத பயன்கள்!

காப்பியை குடிக்க பயன்படுத்துவது போலவே சருமத்தை அழகு படுத்தவும் மிகவும் பயன் உள்ளது. காப்பி தூளை  நீருடன் கலந்து பேஸ்ட் போல் செய்து சருமத்தின் அனைத்து புறங்களிலும் தேய்க்க வேண்டும். இது சருமத்திற்கு இயற்கை முறையில் அழகை கொடுக்கும் மற்றும் சரும கோளாறுகள் வருவதை தடுக்கும்.

கருவளையம் போகுமா?

காப்பி தூளை தண்ணீர் ஊற்றி கரைத்து கண்களிற்கு கீழ் வரும் கருவளையத்திற்கு தினமும் பயன்படுத்த கருமை நிறம் நீங்கி வெண்மை தோற்றத்தை கொடுக்கும் மற்றும் கண்களில் ஏற்படும் வீக்கம், மங்கிய நிலை, குளிர்ச்சியை கொடுக்கும் ஆற்றல் கொண்டது.

வயது முதிர்ச்சியை போக்கும்:

காப்பியை முகத்திற்கு பயன்படுத்த பருக்கள் மறைந்து, வயது முதிர்ச்சியால் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கி இளமையான தோற்றத்தை கொடுக்கும் பண்பு கொண்டது. உடலில் ஏற்படும் தழும்புகள், காயங்களால் ஏற்படும் சரும கோளாறுகள் தீர்ந்து மிருதுவான சருமத்தை கொடுக்கும் மற்றும் வெயிலின் தாக்கத்தினால் உருவாகும் வறட்சி நீங்கி குளிர்ச்சியை கொடுக்கும்.

தலை முடி பிரச்சனைக்கும் பயன் படுமா ?

நீருடன் கொஞ்சம் காப்பி தூளை கலந்து முடிகளின் வேர் நுனி வரை நன்கு மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் கொண்டு குளிக்க வேண்டும். இது தலை முடி உதிர்வு பிரச்சனையை போக்கும் மற்றும் பொடுகு தொல்லைகள் இருக்காது.

அழகான முகம் :

முகத்தை பிரகாசமாக வைத்து கொள்ள காப்பி தூளை பாலுடன் அல்லது நீருடன் கலந்து முகத்தில் பேசியல் செய்து வர வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை தேய்த்து சிறிது நேரங்கள் கடந்த பிறகு முகத்தை நீர் அல்லது ரோஸ் வாட்டர் கொண்டு கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்ய முகம் நல்ல அழகை கொடுக்கும் மற்றும் பிரகாசமான தோற்றத்தை கொடுக்கும்.

Share this story