Tamil Wealth

மின்சார சாதனங்கள் அனைத்துமே நமக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடியதே!

மின்சார சாதனங்கள் அனைத்துமே நமக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடியதே!

அனைவரும் உபயோகிக்கும் மின்சார சாதனங்கள் நமக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அமைந்ததே.

மடிக்கணினி :

மடிக்கணினியை அதிகம் மடியில் வைத்து உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். மடிக்கணினியை உபயோகிக்கும் பொழுது மடியில் ஏதேனும் வைத்து கொண்டு அதன்மேல் மடிக்கணினியை வைத்து கொள்ளுங்கள். இதில் இருந்து வெளியாகும் அதிகமான வெப்பம் உடலுக்கு பல விளைவுகளை ஏற்படுத்தும். இதை பெண்கள் அதிகம் உபயோகிக்க அவர்களுக்கு கருப்பையில் கோளாறுகள் வரும் அபாயம் உள்ளது. அவர்கள் இதனை மிக கவனத்துடன் கையாள வேண்டும்.

மின்சார சேவர் :

இது மின்சாரத்தின் மூலம் இயங்க கூடியது. இதனை ஆண்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதனை கொண்டு நாம் சேவ் செய்யும் பொழுது இ.எம்.எஃப் வெளிப்படுவதால் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. உடல் உறுப்புகளில் படாத அளவுக்கு இடைவெளி விட்டே பயன்படுத்துங்கள்.

கைபேசி :
அனைவரும் சுலபாக பயன்படுத்தும் ஒரு சாதனமே இது. இதை நாம் அதிக அளவில் கையில் வைத்து கொண்டே இருக்கிறோம். இதில் இருந்து வெளிப்படும் வெப்பத்தினால் உடலுக்கு தீங்கே. மைக்ரோ அலைகள் நம்மை பாதிப்புக்கு உள்ளாகும் தன்மை கொண்டது. இதில் சேர்ந்து உபயோகிக்கும் ஹெட்செட் மூலம் காதுக்கும் கேடு விளைவித்து செவித்திறனை பாதிக்கும்.

 

Share this story